News April 14, 2024
நாமக்கல்: பழுதாகி நின்ற டிராக்டர்

குமாரபாளையம் ஆவத்திபாளையம் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றுக் கொண்டு வந்திருந்த டிராக்டர் வாகனம் நிறுத்தத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கும்போது, பெட்டியில் உள்ள ஆங்கிள். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் குமாரபாளையம் சாலையில் வாகனங்கள் செல்ல சற்று சிரமமாக உள்ளது.
Similar News
News December 3, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து இன்று (புதன்) மற்றும் வரும் நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயில் உள்ளன. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்! நாமக்கலில் இருந்து பெங்களூரூ, மைசூரு, ஹூப்ளி போன்ற பகுதிகளுக்கு செல்ல நல்ல ரயில்வசதி உள்ளதால் நாமக்கல் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
News December 3, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதற்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம்.
News December 3, 2025
நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆக நீடித்து வருகின்றது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆகவே நீடிக்கின்றது. குளிர்காலம் (ம) வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உச்ச நிலையில் நீடித்து வருகின்றது


