News August 6, 2024
நாமக்கல்: பருத்தி ஏலத்தில் ரூ 29 லட்சத்திற்கு வர்த்தகம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தங்க வளாகத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மொத்தம் 1190 மூட்டைகளை கொண்டு வந்தனர். இவை ஆர்சிஎஸ் ரகங்கள் ரூ.7189 முதல் 7661 வரையிலும், மட்ட ரக பருத்தி ரூ.4199 முதல் 5219 வரையிலும், சுரபி ராகங்கள் ரூ.8200 முதல் ரூ.8512 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
Similar News
News November 28, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

நாமக்கல் மக்களே, இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 28, 2025
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.11 சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.11 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.122 ஆக குறைந்து உள்ளது. முட்டை விலை உயர்வைத் தொடர்ந்து, முட்டை கோழி விலையும் உயர்வடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


