News August 9, 2024
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில், பரமத்தி பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது கணவர் முருகன் சாலை விபத்தில் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் ரிலையன்ஸ் தர மறுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. நேற்று மாலை விசாரணை முடிவில், முருகன் குடும்பத்தாருக்கு ரூ 22 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
Similar News
News November 4, 2025
நாமக்கல் இரவு ரோந்து அலுவல் விவரம்

இரவு ரோந்து விவரம்
மாவட்ட இரவு ரோந்து அதிகாரி
திரு. முருகேசன், காவல் துணை கண்காணிப்பாளர்,DCRB, நாமக்கல் 94981 6960. நாமக்கல்லுக்கு திருமதி. டௌலத் நிஷா, காவல்ஆய்வாளர் எருமபட்டி காவல் நிலையம். 97885 99940. இராசிபுரம் திருமதி. இந்திரா, காவல் ஆய்வாளர் மங்களபுரம் காவல் நிலையம் 9498168055.தி.கோடு
திருமதி. சங்கீதா, காவல் ஆய்வாளர் வெப்படை காவல் நிலையம் 9498167212. வேலூர்
திரு. ஷாஜகான்,காவல் ஆய்வாளர்
News November 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் இன்று நவம்பர் 4ம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது இதனால் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.45 காசுகளாக அதிகரித்தது. மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகாரித்தது. இதன் விளைவாக உயர்வு என கூறப்படுகிறது
News November 4, 2025
நாமக்கல்: இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் ஆகியோர் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்படுகிறது. வருகிற நவ.25ஆம் தேதிக்குள் உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.


