News April 5, 2025
நாமக்கல்: நாளை மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 18, 2025
நாமக்கல்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை!

நாமக்கல்லில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற நாமக்கல்லை சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.
News October 18, 2025
நாமக்கல் அருகே சாலை விபத்து: ஒருவர் பலி

தாத்தயங்கர்பட்டி பில்லா துறையை சேர்ந்த வைரமாணிக்கம், 45. இவர் இரவு, நாமக்கல் சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து விட்டு, டூவீலரில் பொட்டிரெட்டிபட்டி அரசு பள்ளி அருகே சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதானால், பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News October 18, 2025
நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

நாமக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு விடுத்துள்ளார். தீபாவளி அதிரடி சலுகை தள்ளுபடி என்ற பெயரில் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகள், சமூக ஊடக செயலிகள் மூலம் வரும் கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏதேனும் குறுஞ்செய்தி அல்லது லிங்க் மூலம் உங்களை தொடர்பு கொண்டால் நீங்கள் உதவிக்கு அழைக்க வேண்டியவை 1930 என்ற என்னை அழைக்கவும்.