News April 13, 2024
நாமக்கல் நகரில் கடை திறப்பு

நாமக்கல் நகரில் தோசை ஹட் எனும் புதிய சைவ உணவக திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி உணவகத்தை திறந்து வைத்தார். இந்த கடையில் 70க்கும் மேற்பட்ட சைவ வகைகளில் தோசை கிடைக்கும் என நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
நாமக்கல்: முட்டை விலை ரூ.6.10 காசுகளாக நீடிப்பு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாக நீடித்து வருகின்றது. இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று (டிச. 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றமின்றி 610 காசுகளாகவே நீடிக்கின்றது. முட்டை விலை வரலாறு காணாத உச்சநிலையில் தொடர்வதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News December 3, 2025
நாமக்கல்: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News December 3, 2025
நாமக்கல் ரயில் பயணச்சீட்டு நிலையம் இடமாற்றம்!

நாமக்கல் ரயில் நிலையம் வேட்டாம்பாடி அருகே செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தற்போது நவீனப்படுத்துதல் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பயணச்சீட்டு அலுவலகம் தற்காலிகமாக முதல் தளத்திலுள்ள நடைமேடை எண்-1ல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் ரயில் பயணங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


