News April 18, 2024
நாமக்கல் தொகுதி: இது உங்களுக்கு தெரியுமா !
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுகவை சேர்ந்த ஏகேபி சின்ராஜ் வெற்றிபெற்றார். இவர், மொத்தம் 55.24% வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுகவை சேர்ந்த காளியப்பன் 31.85 % வாக்குகளைப் பெற்று 2ஆம் இடம் பெற்றார். கடைசி இடத்தில் சுயேச்சை வேட்பாளர் சிவராஜி இருக்கிறார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 341. நாளை ஜனநாயக கடைமை ஆற்ற தவறாதீர்!
Similar News
News November 20, 2024
குமாரபாளையத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நாமக்கல்: குமாரபாளையம் பகுதியில் அதிகளவு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை விற்று வந்த சீனிவாசன், ஸ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவர்களை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News November 20, 2024
காளான் வளர்க்க இலவச பயிற்சி
ராசிபுரம் அடுத்த மோளப்பாளையம் கிராமத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் 25, 26-ல் நடக்கவுள்ளது. இதில், விவசாயிகள், பெண்கள், புதிய தொழில் முனைவோர், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 98946-89809 என்ற எண்ணை அழைக்கலாம்.
News November 20, 2024
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 8 கி.மீ., 8 கி.மீ. மற்றும் 6 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.