News March 29, 2024
நாமக்கல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியையொட்டி இன்று நாமக்கல் தேவாலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனா்.
நாமக்கல் – துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் பேராலயத்தில் காலையில் இளைஞா் ஒருவா் சிலுவையை சுமந்தபடி வருவதும், அவா் அடித்து துன்புறுத்தப்படுவதும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
Similar News
News February 7, 2026
ராசிபுரத்தில் வசமாக சிக்கிய நபர்!

ராசிபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அத்தனூர் அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மாரியப்பன் (40) என்பவரை பிடித்த போலீஸார், அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராசிபுரம் காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News February 7, 2026
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் கோட்டம் நாமக்கல் வழியாக செல்லும் ரயில்களின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சேலம்-கரூர், மயிலாடுதுறை-சேலம், சென்னை-பாலக்காடு, சேலம்- கரூர்-திருச்சி, உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் சேலம் மார்க்கமாகவும் பல்வேறு ரயில்கள் நாள்தோறும் வாரந்தோறும் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.