News March 27, 2024
நாமக்கல் தேர்தல் பார்வையாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

நாமக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக வருமான வரித்துறை அதிகாரி அர்ஜூன் பேனர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நாமக்கல் நகருக்கு வந்து தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.தேர்தல் பார்வையாளர்களுடன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இன்று 27.03.2024 ஆலோசனை நடத்தினார்கள்.
Similar News
News December 18, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (18-12-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.118 ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 100- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 6.25- ஆக நீடித்து வருகிறது. கடைகளில், முட்டை விலை சில்லறை விற்பனையில் ரூ. 6.75 முதல் ரூ. 7 வரையிலும் விற்பனையாகி வருகின்றது.
News December 18, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி (டிச.19) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News December 18, 2025
நாமக்கல்: போலீஸ் அபராதம் விதிக்க முடியாது!

நாமக்கல் மக்களே போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, <


