News March 19, 2024
நாமக்கல் தேர்தல் குறித்து சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர்

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தலைமையில்
பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமும் மற்றும் பேருந்து பயணிகளிடம் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Similar News
News December 17, 2025
வேலகவுண்டம்பட்டி அருகே பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

வேலகவுண்டம்பட்டி அருகே தட்டாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் இவரது மனைவி ரங்கம்மாள் வயது 60 இவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் இந்த நிலையில் ரங்கம்மாள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கிய கீழே விழுந்தார் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததில் மருத்துவர் பரிசோதனை செய்து இறந்ததாக தெரிவித்தார். போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.
News December 17, 2025
நாமக்கல்: மின்தடை அறிவிப்பு! ரெடியா இருங்க

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (டிச.18) பராமரிப்பு காரணமாக காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, கொல்லிமலை, காரவள்ளி, உத்திரகிடிகாவல், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் பார்க், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, பில்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
News December 17, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


