News March 21, 2024
நாமக்கல் தேர்தலுக்கு நவீன மின்னணு வாகனம் தயார்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் 24ல் 100 சதவிகித வாக்குபதிவு நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நவீன மின்னணு வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட உள்ளது.
Similar News
News November 15, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News November 15, 2025
நாமக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உதவி மையங்களை தொடர்பு கொள்ள நாமக்கல்- 04286-233901, ராசிபுரம் -04287-222840, திருச்செங்கோடு- 04288-253811, சேந்தமங்கலம் – 6282228034, பரமத்தி வேலூர் – 04268-250099, குமாரபாளையம்- 04288-246256 – ஆகிய இலவச சேவை எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!
News November 15, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்று (15-11-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 106- ஆகவும் நீடித்து வருகிறது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.90 ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


