News April 3, 2025
நாமக்கல்: தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் “சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” 04.04.2025-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் நடைபெறவுள்ளது.
Similar News
News November 22, 2025
வாக்காளர் பட்டியல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று நவம்பர்-22ந் தேதி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News November 22, 2025
100 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கட்சியினா் சிறப்பாக கொண்டாட வேண்டும், நவ.27-ல் பிறக்கும் நூறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தெரிவித்தாா்.
News November 22, 2025
நாமக்கல்: பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் கோழிகளில் ஏற்பட்ட வெள்ளை கழிச்சல் காரணமாக பல கோழிகள் இறந்ததாக, கோழி நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பண்ணையாளர்கள், கோழிகளின் எதிர்ப்பு சக்தியை ஊநீர் பரிசோதனை மூலம் அறிந்து, தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மேலும் உயிர் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


