News April 14, 2024

நாமக்கல்: தமிழ் புத்தாண்டு நீர் மோர் வழங்கல்

image

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக மாரியம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவருக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாலு தலைமை மருத்துவ ஆளுநர் ராஜூ ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.மேலும் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக நிர்வாகம் ராஜேஷ், கார்த்திக் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 16, 2025

நாமக்கல்: தவெக தலைவர் விஜய் வருகை!

image

நாமக்கல் உழவர் சந்தை எதிரே உள்ள மதுரை வீரன் கோயில் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் டிசம்பர்-13 அன்று நாமக்கல் மக்களைச் சந்திக்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி, அக்கட்சியினர் நேற்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News September 16, 2025

நாமக்கல்: இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 16.09.2025 செவ்வாய்க்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்: நாமக்கல் மாநகராட்சி அரசு துவக்கப்பள்ளி, திருச்செங்கோடு நகராட்சி தனியார் திருமண மண்டபம், காளப்பநாயக்கன்பட்டி தனியார் திருமண மண்டபம், பள்ளிபாளையம் கலைவாணி திருமண மண்டபம், பரமத்தி சமுதாய நலக்கூடம், ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 16, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் நேற்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரு முட்டையின் விலை ரூ. 5.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முட்டையின் விலை ரூ.5.20 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!