News April 14, 2024
நாமக்கல்: தபால் வாக்கு செலுத்திய மாவட்ட பி.ஆர்.ஓ

மக்களவைத் 2024 தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே அரசு அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் தனது தபால் வாக்கினை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் நேற்று செலுத்தினார்.
Similar News
News November 4, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (03.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை !

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று ( நவம்பர் . 3) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை ( நவம்பர் . 4) முதல் முட்டையின் விலை ரூ.5.40 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News November 3, 2025
நாமக்கல்: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை<


