News May 17, 2024

நாமக்கல்: டெங்கு தின விழிப்புணர்வு உறுதிமொழி

image

நாமக்கல் நகராட்சியில், டெங்கு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்து உறுதிமொழி வாசித்தார். இதில் நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 8, 2025

முதல்வரை சந்தித்த நாமக்கல் ஆட்சியர்!

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி சந்தித்தார். அப்போது கடந்த 18ந் தேதி அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில், இந்திய குடியரசு தலைவர் தலைமையில் நடைபெற்ற 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில் JSJB முன் முயற்சியின் கீழ் 7057 நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக விருது வழங்கப்பட்டது. அதனை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

News December 8, 2025

நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.08) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (ராஜு – 9498114857) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News December 8, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர்-8ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முட்டையின் தேவை அதிகரித்தது. இந்த உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக இதே விலை நீடித்து வருகிறது.

error: Content is protected !!