News April 17, 2025
நாமக்கல்: சூதாடிய 20 பேர் கைது !

திருச்செங்கோடு மலையடிவாரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காசு வைத்து சூதாடுவதாக திருச்செங்கோடு போலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில், அங்கு ஒரு வீட்டில் போலீசார் சுற்றி வளைத்து சோதனையிட்ட போது சுமார் 20 பேர் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் வாகனங்கள் மற்றும் 4 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்
Similar News
News December 18, 2025
ப.வேலூர் அருகே தந்தை கண்டித்ததால் நடந்த அதிர்ச்சி!

ப.வேலூர் அருகே பூசாரிபாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த தினேஷ் (28). மதுப்பழக்கம் காரணமாக தந்தை கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கடந்த 14ம் தேதி விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 18, 2025
நாமக்கல்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News December 18, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (18-12-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.118 ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 100- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ. 6.25- ஆக நீடித்து வருகிறது. கடைகளில், முட்டை விலை சில்லறை விற்பனையில் ரூ. 6.75 முதல் ரூ. 7 வரையிலும் விற்பனையாகி வருகின்றது.


