News March 27, 2025
நாமக்கல்: கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நீச்சல் பயிற்சி 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,416. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 8220310446 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 17, 2025
நாமக்கல்லில் ரூ.14,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டப் பிரிவில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.14,000. இப்பணிக்கு நாளைக்குள் (நவ.17) வகுரம்பட்டி, அம்மா பூங்கா எதிரில் உள்ள சமுதாய கூடம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகமை அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
நாமக்கல்: இரவு நேர ரோந்து அலுவல் குறித்த விபரம்!

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாள்தோறும் இரவு நேர ரோந்து பணி ஈடுபடும் அலுவலர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவு நேர ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள் குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் போது மக்கள், தங்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News November 16, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 6-ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.95 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில், இன்றைய தினம் 5 காசுகள் உயர்வடைந்து ரூ. 6.00 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ளதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வரலாறு காணாத முட்டை விலை உயர்வால், கோழிப்பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


