News April 25, 2024
நாமக்கல்: காசோலை வழங்கிய ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம், வேலவன் நகர், காட்டூர், காட்டுக் கொட்டாய் பகுதியில் தேர்தல் பணியின் போது இறந்த ஜெயபாலன் வாரிசுதாரர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கருணைத் தொகையாக ரூ.15,00,000/- க்கான காசோலையினை வழங்கினார். அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News November 20, 2024
நாமக்கல்லில் 25ஆம் தேதி கடையடைப்பு
நாமக்கல் பரமத்தி சாலையில் அமைந்துள்ள வணிகர் சங்க அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானம் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி 25ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் செய்வதாக முடிவு செய்தனர்.
News November 20, 2024
நாமக்கல்லில் துணை மேயர் அலுவலகம் திறப்பு
நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ளது நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று துணை மேயர் பூபதிக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை எம்பி ராஜேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மேயர் மற்றும் திமுக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News November 20, 2024
குமாரபாளையத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நாமக்கல்: குமாரபாளையம் பகுதியில் அதிகளவு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை விற்று வந்த சீனிவாசன், ஸ்ரீதர், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவர்களை நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.