News April 28, 2025
நாமக்கல்: கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-28) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
Similar News
News November 23, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
News November 23, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.23) நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), பள்ளிபாளையம் – (டேவிட் பாலு – 9486540373) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 23, 2025
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.23.51 லட்சத்திற்கு விற்பனை!

நாமக்கல்லில் காலை, மாலை என இருவேளை உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த 55,010 கிலோ காய் கனிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் ரூ.23,51,570 விற்பனையானது. உழவர் சந்தைக்கு 11,002 நுகர்வோர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர்.


