News November 24, 2024
நாமக்கல்: கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 குறைவு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.73 ஆக சரிவடைந்துள்ளது. இதேபோல் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி நேற்று அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.97 ஆக விற்பனையாகி வருகின்றது.
Similar News
News November 22, 2025
நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 22, 2025
ராசிபுரம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்!

ராசிபுரம் அருகே மெட்டாலா கும்பக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி. கடைக்கு சென்றவர் வீடு திரும்பாமல் போனதால், தாத்தா நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், வடுகம் நடுவீதியைச் சேர்ந்த விஷ்வா (19) ஆசைவார்த்தைகளால் மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மகளிர் போலீசார் மாணவியை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தும், விஷ்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News November 22, 2025
நாமக்கல் ஆட்சியருக்கு நீர் மேலாண்மைக்கான விருது!

இந்திய குடியரசு தலைவரின் தலைமையில் கடந்த (நவ.18) அன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 6-வது தேசிய நீர் விருதுகள் மற்றும் ஜல் சஞ்சய் ஜன் பாகீரதி 1.0 விருது வழங்கும் விழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி-க்கு “JSJB” முன்முயற்சியின் கீழ் 7057 நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக ரூபாய் 25 லட்சம் ரொக்க ஊக்கத்தொகை மற்றும் வகை 3-ல் JSJB 1.0 விருது வழங்கப்பட்டது.


