News April 6, 2025
நாமக்கல் இளைஞர்களுக்கு குட் நியூஸ் !

ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது நாமக்கல்லில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும். ஐடி படித்த நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் ( NECC) கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூல பொருட்களின் விலை உயர்வு, மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உயர்வு காரணம் என கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த விலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
News December 4, 2025
நாமக்கல் சோப்புக்கல் பாத்திரங்களுக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் ஐந்து பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. அதில் நாமக்கல் சோப்புக்கல் சமையல் பாத்திரங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சோப்புக்கல் பாத்திரங்கள் வலிமையாகவும், நீடித்த உழைப்புடனும் இருப்பதால், குறைந்தபட்ச பராமரிப்புடன் கூட பல ஆண்டுகள் உடையாமல் இருக்கும். தமிழ்நாட்டில் மொத்தம் 74 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உள்ளன.
News December 4, 2025
நாமக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


