News December 6, 2024
நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

➤ நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி ➤ சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு ➤ நாமக்கல்லில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு ➤ சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர் ➤ தூய்மை பணியாளர்களுடன் உணவு உண்ட ஆட்சியர் ➤ பள்ளிபாளையம் பகுதிகளில் நாளை மின்தடை ➤ ராசிபுரத்தில் உலக மண் தினம் கடைபிடிப்பு ➤ தோக்கவாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு
Similar News
News December 18, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.18) நாமக்கல் – (தங்கராஜ் – 9498170895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (ரவி – 6374774936) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 18, 2025
ரூ. 6.25- ஆக தொடர்ந்து நீடிக்கும் முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை யொட்டி கேக் தயாரிக்க முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளது.
News December 18, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!


