News May 7, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (01/05/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்சுமணதாஸ் (9443286911), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
நாமக்கல்: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

நாமக்கல் மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 16, 2025
முட்டை விலை கிடு கிடுவென உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.90 ஆக விற்பனையாகி வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.95 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 16, 2025
நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை (நவம்பர்.17) திங்கள் அதிகாலை 4:20am மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.


