News February 18, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (17/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சவிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
நாமக்கல்லில் நாளை மின்நிறுத்தம் அறிவிப்பு

நாமக்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 17ஆம் தேதி நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசாணம், சின்னமுதலைப்பட்டி, சிலுவம்பட்டி, கிருஷ்ணாபுரம், தும்மங்குறிச்சி, எர்ணாபுரம் கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்!
News September 16, 2025
நாமக்கல்: மண்டலத்தில் கறிக்கோழி, முட்டை விலை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.20 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.5.25 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.123-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
News September 16, 2025
மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.19.81 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்!

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 19.81 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி நேற்று வழங்கினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.