News August 24, 2024
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்

ஆவணி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று 11 மணி அளவில் ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என பலவகை வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
Similar News
News September 17, 2025
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய முகாம்கள்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 17.09.2025 புதன்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்: நாமக்கல் மாநகராட்சி ரெட்டிப்பட்டி சமுதாயக்கூடம், மல்லசமுத்திரம் பேரூராட்சி நந்தவன பாவடி செங்குந்தர் திருமண மண்டபம், எலச்சிபாளையம் வட்டாரம் பொன்காளியம்மன் திருமண மண்டபம், இராசிபுரம் வட்டாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 17, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல் வழியாக வரும் விழாக்காலங்களை முன்னிட்டு இயக்கப்படவுள்ள 06121/06122 சென்னை – செங்கோட்டை – சென்னை சிறப்பு ரயிலிலுக்கும், 06053/06054 நாகர்கோவில் – சென்னை – நாகர்கோவில் ரயிலிலுக்கும் நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கவுள்ளது. எனவே, நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி விடுமுறைக்கு சென்னை, மதுரை, திருநெல்வேலி, செல்வதற்கு பயனடைந்துகொள்ளவும்.
News September 16, 2025
நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 16) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 525 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.