News March 19, 2024

நாமக்கல் அருகே  பலியான 27 உயிர்கள் 

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் கருப்பண்ணன் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு 25 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News

News November 27, 2025

நாமக்கல்: முட்டை விலை மாற்றமின்றி நீட்டிப்பு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்றைய தினம் (நவ.27) முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆகவே நீடிக்கின்றது. கடந்த ஒரு வாரமாக முட்டை கொள்முதல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 27, 2025

நாமக்கல்: கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்!

image

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை வரும் டிச.04ந் தேதிக்குள் மாநகராட்சி, நகராட்சிகள் பேரூராட்சிகள் (ம) ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நியாய விலை கடைகளில் திரும்ப ஒப்படைக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 27, 2025

நாமக்கல்: வங்கி ஊழியரிடம் திருட்டு

image

நாமக்கல் வீசாணத்தைச் சேர்ந்த கோகிலா (33) வங்கி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 24-ம் தேதி பணியை முடித்து பழைய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் வீட்டுக்கு சென்றபோது, பஸ்சின் பின்புறம் நின்ற மர்ம நபர்கள் அவரின் பையில் இருந்த பர்ஸில் இருந்து ரூ.15,000 திருடினர். இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார்; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!