News April 21, 2025
நாமக்கல்லில் 25-ம் தேதி இலவச பயிற்சி!

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286-266345, 266650, 7358594841 என்ற தொலைபேசி எண்களை தொடர்கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 23, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 423 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 23-ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு: எருமப்பட்டி 20 மிமீ, குமாரபாளையம் 3.20 மிமீ, மங்களபுரம் 12.60 மிமீ, நாமக்கல் 90 மிமீ, பரமத்திவேலூர் 35 மிமீ, புதுச்சத்திரம் 17மிமீ, ராசிபுரம் 22 மிமீ, சேந்தமங்கலம் 61.20 மிமீ, திருச்செங்கோடு 18 மிமீ, ஆட்சியர் வளாகம் 19 மிமீ, கொல்லிமலை செம்மேடு 35 மிமீ என மொத்தம் 423 மிமீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 23, 2025
நாமக்கல்லுக்கு வருகை தரும் துணை முதலமைச்சர்!

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இன்று காலை சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேந்தமங்கலம் பகுதிக்கு இன்று மதியம் வருகை தர உள்ளார்.
News October 23, 2025
நாமக்கல்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.