News August 26, 2024
நாமக்கல்லில் 2,000 விபத்து வழக்குகள் பதிவு

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 2,000 விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.
Similar News
News December 6, 2025
திருச்செங்கோடு அருகே நடந்த பகிர் சம்பவம்!

திருச்செங்கோடு அருகே சிறுமொளசி பகுதியை சேர்ந்த பழனியப்பன்(76). கடந்த 7 ஆண்டுகளாக ஏற்பட்ட கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அறுவை சிகிச்சை செய்தும் வலி குறையாததால் மனஉளைச்சலில் 2ம் தேதி தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்செங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
நாமக்கல்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News December 6, 2025
நாமக்கல்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


