News March 20, 2024
நாமக்கல்லில் விநோதமான முறையில் வேட்பு மனுதாக்கல்

மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாமக்கல் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நபராக வந்திருந்தார்.அவர் 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி மூட்டையாக கட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு வந்திருந்தார்.சோதனைக்கு பிறகு காந்தியவாதி ரமேஷை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் போலீசார் அனுமதித்தனர்
Similar News
News November 24, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.24) நாமக்கல் -(தங்கராஜ் – 9498170895) ,வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (நல்லமுத்து – 9498168985) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 24, 2025
நாமக்கல்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 24, 2025
நாமக்கல்லில் கார் மோதி பயங்கரம்!

நாமக்கல் மாவட்டம், கதிராநல்லூர் நத்தம்மேடு எம்ஜிஆர் காலனி சேர்ந்தபெரியசாமி (57) வள்ளிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்லும் போது சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த கார் அவரது ஸ்கூட்டரில் மோதி படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


