News August 14, 2024
நாமக்கல்லில் ரூ.1 கோடியில் பூஞ்சோலை திறப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சன்னியாசி கரடு, குறுக்கபுரம், பட்டணம், ஆலேரிப்பட்டி, முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 5 மரகதப் பூஞ்சோலைகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். சன்னியாசி கரடு பகுதியில் திறந்து வைக்கப்பட்ட மரகத பூஞ்சோலையை எம்பி ராஜேஷ்குமார் பார்வையிட்டார்
Similar News
News November 23, 2025
நாமக்கல் மாவட்டத்தில் மொத்த மழையளவு!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நவம்பர்-23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: மங்களபுரம் 7.40 மிமீ, நாமக்கல் 11 மிமீ, பரமத்திவேலூர் 16 மிமீ, புதுச்சத்திரம் 5 மிமீ, ராசிபுரம் 10 மிமீ, சேந்தமங்கலம் 4.60 மிமீ, திருச்செங்கோடு 4 மிமீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 4 மிமீ, கொல்லிமலை 9 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 71 மிமீ மழை பதிவாகியுள்ளது.
News November 23, 2025
நாமக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

நாமக்கல் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியபடுத்துங்க!
News November 23, 2025
நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


