News April 4, 2025
நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு

நாமக்கல் மண்டலத்தில், தொடர்ந்து உயர்ந்துவந்த முட்டை விலை, திடீரென 20 பைசா சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டதால், பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
Similar News
News December 20, 2025
திருச்செங்கோட்டில் தட்டி தூக்கிய பொறுப்பாளர்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி 29-வது வார்டைச் சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுக நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது உடன் நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News December 20, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (19.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பு..!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.25- காசுகளாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ.6.25-ஆக நீடிக்கின்றது. இதுவரை காணாத உச்ச நிலையில் முட்டை விலை தொடர்ந்து நீடிப்பதால் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


