News March 29, 2024
நாமக்கல்லில் ‘மீறினால் பாயும்’

2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களை பொறுப்பாக பயன்படுத்தி சரியான தகவல்களை பொது மக்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பதிவிடுவோர் மற்றும் அவற்றை பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 13, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல்லில் இன்று செப்டம்பர்-13ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. மேலும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.
News September 13, 2025
நாமக்கல்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️நாமக்கல் மாநகராட்சி – அரசு துவக்கப்பள்ளி நாமக்கல்.
▶️திருச்செங்கோடு – நாடார் திருமண மண்டபம் திருச்செங்கோடு.
▶️காளப்பநாயக்கன்பட்டி – கலைவாணி திருமண மண்டபம் துத்திக்குளம்.
▶️பள்ளிபாளையம் – கொங்கு கலையரங்கம் வெடியரசம்பாளையம்.
▶️பரமத்தி – சமுதாய நலக்கூடம் மேலப்பட்டி.
▶️வெண்ணந்தூர் – அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி தேங்கல்பாளையம்.
News September 13, 2025
நாமக்கல்: ஆவின் பால் கடை வைக்க ஆசையா? சூப்பர் திட்டம்!

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <