News August 24, 2024
நாமக்கல்லில் மாணவர் மரணம்: உறவினர்கள் வாக்குவாதம்

எருமப்பட்டி அடுத்த வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +1 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பள்ளி உதவி தலைமையாசிரியரை முற்றுகையிட்டு மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 20, 2025
நாமக்கல் : PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 20, 2025
நாமக்கல்; கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் இன்று (20-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், ரூ.6.05 ஆக விற்பனையாகி வந்த முட்டை விலை, நேற்று நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், எவ்வித மாற்றமும் செய்யப்படாததால் அதே விலையில் நீடிக்கின்றது.
News November 20, 2025
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


