News April 26, 2025
நாமக்கல்லில் தீராத நோய்கள் தீர்க்கும் கோயில்!

பேளுக்குறிச்சியில், பழனியப்பர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை, வேட்டைக்காரன் வடிவில், தலையின் உச்சியில் முடியை முடிச்சு போட்டுள்ளது. முருகப்பெருமான் வள்ளியை வசீகரித்து திருமணம் செய்ய அழகான வேட்டைக்கார இளைஞனாக வேடமணிந்த தலம் இது. தோல், எலும்பு நோய்கள் குணமாவதற்கும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு கிடைக்கவும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, முருகனை வழிபடுகின்றனர். SHARE பண்ணுங்க!
Similar News
News December 11, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.11) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 11, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர்-11ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக இதே விலை நீடித்து வருகிறது.
News December 11, 2025
நாமக்கல்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.


