News November 23, 2024
நாமக்கல்லில் கோர விபத்து: நேரில் சென்ற அமைச்சர்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அடுத்த மெட்டலா அருகே நேற்று பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அங்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் நாமக்கல் ஆட்சித் தலைவர் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
Similar News
News October 16, 2025
நாமக்கல்: வாலிபர் பரிதாப பலி!

நாமக்கல்: குமாரபாளையம் அருகே உள்ள சமயசங்கிலி தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜ்(26). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மிந்தினம் அதிகாலை தனது பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் பாடுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News October 16, 2025
நாமக்கல்: பைக் குறுக்கே நாய் வந்ததால் ஒருவர் பலி!

நாமக்கல்: ப.வேலூர் தாலுகா சேளூர், கந்தமாளையம், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(58). கூலித்தொழிலாளியான இவர், தனது மனைவிக்கு மருந்து வாங்க வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாண்டமங்கலம் அருகே சென்றபோது பைக்கின் குறுக்கே நாய் வந்ததால் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 15, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

நாமக்கல்லில் இன்று அக்டோபர் 15ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது இந்தக் குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது மழை குளிர் உள்ளிட்ட காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது இதனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை இன்று ரூ. 5.15 காசுகளாக அதிகரித்தது