News May 7, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.4 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.30) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.4 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.82 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

Similar News

News October 24, 2025

நாமக்கல்: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

image

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் நவ்.11ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தலா?

image

சேங்கமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவால் அந்த தொகுதி காலியாகி உள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர், ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அல்லது பதவி விலகிவிட்டால் பொதுவாக 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். எனினும், தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

News October 24, 2025

ராசிபுரம் வக்கீல் சங்க நிர்வாகி பலி!

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் மற்றும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் காமராஜ் (55).இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டூவீலரில் சென்றபோது, தவறி விழுந்து படுகாயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!