News April 15, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.10 குறைவு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.19 குறிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.86 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

Similar News

News November 23, 2025

ராசிபுரத்தில் நடந்த கோர சம்பவம்!

image

ராசிபுரம்–அணைப்பாளையம் ரயில் பாதையில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் நேற்று மாலை இருந்தது. முதலில் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தார். சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஓட்டுநர் உரிமத்தின் மூலம் அவர் ராசிபுரம் வரதன் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (51) என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 23, 2025

நாமக்கல்லில் லாரி திருட்டு – பெரம்பலூரை சேர்ந்தவர் கைது!

image

நாமக்கல்லில் செந்தில்குமார் தனக்கு சொந்தமான லாரியை கணேஷ் என்பவரின் பட்டறையில் பழுது நீக்க கடந்த 12ந் தேதி விட்டுள்ளார். இதனை அடுத்து லாரியை காணவில்லை என நல்லிபாளையம் காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் செந்தில்குமார் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பெரம்பலூர் ஆலத்தூர் வரகுபாடியை சேர்ந்த முத்துகுமாரை கைது செய்து லாரியை மீட்டனர்.

News November 23, 2025

நாமக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!