News April 13, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று (ஏப்.12) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று (13.04.2025) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
Similar News
News December 5, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் நுகா்வோா்கள் நலன்கருதி அனைத்துத் துறையின் முதல்நிலை அலுவலா்கள், தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள் பங்கேற்கும் காலாண்டு நுகா்வோா் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் டிச.11 மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நுகா்வோா்கள் கலந்துகொண்டு பொதுவிநியோகத் திட்டம் தொடா்பான கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
நாமக்கல்: கள்ளக்காதலன் அடித்ததால் பெண் விபரீதம்!

நாமக்கல் அடுத்த எருமப்பட்டி பாலமுருகன் மனைவி ஜீவா (37) மற்றும் ஜெயக்குமார் (43) ஆகியோருக்கிடையே 8 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து, சத்யா நகரில் வீடு எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதால் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியேறி பின் வந்தபோது, ஜீவா சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை கண்டார்.இந்த சம்பவம் அறிந்த நாமக்கல் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (டிச.4) இரவு முதல் நாளை (டிச.5) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


