News April 29, 2025
நாமக்கல்லில் கத்தியுடன் சுற்றிய 4 பேர் கைது

நாமக்கல்: பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட இருந்த போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த பள்ளி காலனியை சேர்ந்த அஜய் பிரபாகர் (26), லோகேஸ்வரன் (32), குணசேகரன் (48), கிருபாகரன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குணசேகரன் கத்தியுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
Similar News
News April 29, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (29/04/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சங்கர பாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News April 29, 2025
நாமக்கல் : முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்

நாமக்கல் மாவட்ட காவல் நிலைய எண்கள். நாமக்கல்-04286-231901, மோகனூர்-04286-255291, திருச்செங்கோடு-04288-252309, ராசிபுரம்-04287-222839, குமாரபாளையம்-04288-260100, வேலூர்-04268-220228, வளவந்திநாடு-04286-247428. உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை சார்ந்த கோரிக்கை மற்றும் புகாரை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
நாமக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க நேர்முகத்தேர்வு

நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று (29.4.2025) மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.