News August 8, 2024
நாமக்கல்லில் ஒரே நாளில் 103 நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருச்செங்கோட்டில் நேற்று தேசிய கைத்தறி தின விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் முத்ரா கடன் திட்டத்தின் சார்பில் 73 நெசவாளர்களுக்கு ரூ.31.00 லட்சம் கடனுதவி மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.16.00 லட்சம் மதிப்பில் கடனுதவி உள்ளிட்ட 103 நெசவாளர்களுக்கு 52.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் உமா வழங்கினார்.
Similar News
News November 16, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (நவ.15) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (கோவிந்தசாமி- 9498169110), குமாரபாளையம் – (மாதேஸ்வரன்- 9498168949) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 15, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-15ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 5 காசுகள் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.95 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ரூ.5.90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


