News April 21, 2025
நாமக்கல்லில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

வெண்ணந்தூர் அருகே கடந்த 7-ம் தேதி 1,610 கிலோ ரேஷன் அரிசியுடன் கைதான சேலத்தை சேர்ந்த கோபால் (49) மற்றும் பள்ளிப்பாளையம் அருகே கத்தி காட்டி மிரட்டிய வழக்கில் கைதான சசிகுமார் (30) ஆகிய இருரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்தநிலையில் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News February 22, 2026
குமாரபாளையம் அருகே விபத்து: ஒருவர் பலி!

ஈரோடு ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த விற்பனை பிரதிநிதி ஜெயகுமார், நண்பர் சுரேஷுடன் டீக்கடை அருகே நின்றிருந்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் ஜெயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநர் சந்திரபோஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 21, 2026
நாமக்கல் மாவட்ட நா.த.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

1. இராசிபுரம் – சசிகலா
2. சேந்தமங்கலம் – சி.பொன்னுமணி
3. நாமக்கல் – பிரவின்
4. பரமத்தி வேலூர் – ம.அரவிந்த்
5. திருச்செங்கோடு – ரேவதி
6. குமாரபாளையம் – யுவராணி
News February 21, 2026
நாமக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். (பகிரவும்)


