News March 28, 2025
நாமக்கல்லில் இன்றைய முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட் டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி ரூ.101-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை செய்யப்படவில்லை.
Similar News
News September 17, 2025
விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எம்பி மாதேஸ்வரன்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் நடைபெற்ற மேரா யுவ பாரத் திட்டத்தின் கீழ் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News September 17, 2025
பாண்டமங்கலம்: புரட்டாசி வழிபாடு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பாண்டமங்கலம் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத பிறப்பைமுன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
News September 17, 2025
நாமக்கல்: மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மைய வளாகத்தில் வரும் செப்.19ல் காலை 10.30 மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 10, 12, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இதில் பங்கேற்க வேலையளிப்போரும், வேலைநாடுநரும் tnprivate jobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 04286222260 எண்ணில் அழைக்கவும்.