News January 2, 2025
நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 ஆகவே நீடிக்கிறது.
Similar News
News October 21, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (அக்.21) நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895), வேலூர் – (சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் – (சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் – (செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 21, 2025
நாமக்கல்: சிறப்பாகப் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்!

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, இன்று (21.10.2025) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச.விமலா, இ.கா.ப., சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காவலர்களின் சீர் மிகு பணியைப் பாராட்டி அவர் கௌரவித்தார்.
News October 21, 2025
நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கு <