News April 6, 2025
நாமக்கல்லில் இன்று மழை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியால மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க!
Similar News
News December 1, 2025
நாமக்கல்லில் வாலிபர் திடீர் தற்கொலை!

நாமக்கல் செல்லாண்டி அம்மன் கோவில் அருகில் வசிக்கும் சகுந்தலாவின் மகன் யுவராஜ் (29), கடந்த 5 ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் வந்த அவர் தனது தாயாரை தொடர்பு கொண்டு விஷ மாத்திரையை தின்று விட்டதாக தெரிவித்தார். உடனடியாக நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மிமீ மழை பதிவு!

நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பர்-1ம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1.20 மிமீ, கொல்லிமலை செம்மேட்டில் 5.50 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 6.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
அசால்டாக அசத்திய நாமக்கல் முதியவர்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கரூரில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் சங்கிலி குண்டு எறிதல், வட்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டியில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த கரசப்பாளையத்தை சேர்ந்த சிவசாமி முதல் பரிசை பெற்றார். அவருக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.


