News April 14, 2025

நாமக்கல்லில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Similar News

News April 16, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (16-04-2025) புதன்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ரூ.86-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முட்டை விலையை பொறுத்தவரையில், ரூ.4.15 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News April 16, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் நிலவும் வானிலையில், இன்று 3 மி.மீட்டரும், நாளை (வியாழன்) 4 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 5 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்ச மாக 69.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 16, 2025

நாமக்கல்லில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு நாமக்கல்லை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <>லிங்கை க்ளிக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!