News June 26, 2024
நாமக்கல்லில் இன்று மழை…!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்படி இன்று இரவு 7 மணி வரை நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Similar News
News September 16, 2025
நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 16) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 525 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News September 16, 2025
நாமக்கல்லில் வெளுக்கப்போகும் மழை!

நாமாக்கல் மாவட்டத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.16) 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க!
News September 16, 2025
நாமக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை – செங்கோட்டை – சென்னை (வண்டி எண்: 06121/06122)
நாகர்கோவில் – சென்னை – நாகர்கோவில் (வண்டி எண்: 06053/06054)
ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.