News April 2, 2025
நாமக்கலின் திருப்பதி பெருமாள் கோவில்

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீக்கும் மேலும் திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் சுமையில் உள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News April 10, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.7) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 குறைக்கப்பட்டது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோளின் விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 10, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினம்தோறும் நாமக்கல் மாவட்ட காவல் காவல்துறை சார்பில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் இன்று நாமக்கல்- கபிலன் (9498178628) ராசிபுரம்- ஆனந்தகுமார்(9498106533), திருச்செங்கோடு- வெங்கட்ராமன் (9498172040), மற்றும் வேலூர்-இந்திரா ராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு வந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
News April 10, 2025
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (10-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்று முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.