News August 9, 2024
நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் – அமைச்சர் பெருமிதம்

மதுரைக்கல்லூரியில் நடைபெற்ற “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் பேசுகையில், சராசரி சுமார் 25% இருக்கும் நிலையில் தமிழ்நாடு 50% பக்கத்தில் இருக்கிறது. நாட்டிலேயே முதலிடத்தில் நாம் இருக்கிறோம்” என பெருமிதத்துடன் கூறினார்.
Similar News
News December 1, 2025
மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News December 1, 2025
மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் திடீர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஜனார்த்தனன் 59 முன்னாள் ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் பணியாற்றியபோது சித்த மருத்துவத் துறையில் வேலை பார்த்து கிளினிக் நடத்த சான்றிதழ் பெற்றார். இச்சான்றிதழை வைத்து சொக்கலிங்கபுரத்தில் கிளினிக் நடத்தினர், நேற்று முன்தினம் கிளினிக்கில் இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 1, 2025
மதுரையில் மூன்று மாத பெண் குழந்தை பலி

மதுரை செல்லூர் கார்த்திக் கலைச்செல்வி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதலே தாய்ப்பால் இல்லாததால் டாக்டர்களின் ஆலோசனையின் படி குழந்தைக்கு பால் பவுடர் பால் கொடுத்து தூங்க வைத்தனர், பின் குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


