News January 23, 2025
நாட்டின் நிலை மாற வேண்டும்: ஆளுநர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், இந்திய சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினை தான் உருவாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக ஜாதியின் பெயரால் பிரிவினையை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு தலித்தால் பஞ்சாயத்து தலைவராக முடிவதில்லை. அப்படி ஆனாலும் மரியாதை கிடைப்பதில்லை. இது போன்ற நிலை நாட்டில் மாற வேண்டும் என தெரிவித்தார்.
Similar News
News November 26, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள், தங்களது எஸ்ஐஆர் படிவத்தில் கோரப்பட்டுள்ள வாக்காளர்கள் அல்லது வாக்காளர்கள் உறவினர்களின் 2002/2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்கள் தெரியவில்லை என்றால், படிவத்தில் அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து, படிவத்தின் இறுதியில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.4-ம் தேதி நெல்லை சந்திப்பிலிருந்து, திருவண்ணாமலைக்கு திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது நெல்லையிலிருந்து இரவு (டிச-3) 9:30 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3:30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. பின்னர் மீண்டும் திருச்சியில் இருந்து 03:45-க்கு புறப்பட்டு, டிச.4-ம் தேதி காலை 8 மணி அளவில் திருவண்ணாமலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
திருச்சி: வெளிநாட்டு மாணவர் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் விசா காலம் முடிவடைந்தும், சட்டவிரோதமாக தனியார் விடுதியில் தங்கியிருந்த, ருவாண்டா நாட்டை சேர்ந்த மாணவர் சேமா மன்சி பப்ரீஷ் (35) என்பவரை, வெளிநாட்டினர் பிராந்திய பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்து, திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் ஒப்படைத்தனர். அங்கு உரிய விசாரணைக்கு பின் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலம் அவர் ருவாண்டா நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


