News April 2, 2025
நாங்குநேரி தொழில்பேட்டை விரைவில் உருவாகும்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நாங்குநேரி எம்எல்ஏ பேசுகையில் நாங்குநேரி தொழிற்பேட்டை எப்போது அமையும் என கேட்டார். அதற்கு அமைச்சர் ராஜா நாங்குநேரி தொழில்பேட்டை பிரச்சனைகள் வெகு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் டிட்கோ நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சட்ட சிக்கல்கள் எல்லாம் நீக்கப்பட்டு நிச்சயமாக அங்கு தொழில்பேட்டை உருவாகும் என்றார்.
Similar News
News October 28, 2025
நெல்லையில் 2893 பேர்க்கு பிடிவாரண்டு நிறைவேற்றம்!

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்: நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி நடப்பாண்டில் மட்டும் இதுவரை சுமார் 2893 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
வேளாண்மை தொழில்நுட்ப கருவிக்கு ரூ.2.5 இலட்சம் பரிசு

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நவீன வேளாண்மை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மாநில அளவில் அரசு விருது அறிவித்துள்ளது. முதல் பரிசு ரூ.2.5 லட்சம், 2ம் பரிசு ரூ.1.5 லட்சம், 3ம் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வேளாண்மை உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும்.
News October 27, 2025
நெல்லையில் நாளை மின்தடை ரத்து

நாளை 28.10.2025 பாளை, சமாதானபுரம், வள்ளியூர், மேலக்கல்லூர், திருவேங்கடம், கலிங்கப்பட்டி, முத்தலான்பட்டி, மலையான்குளம், கங்கைகொண்டான், மானூர், ரஸ்தா, வன்னிக்கோனந்தல், மூலக்கரைப்படட்டி, மூன்றடைப்பு, கரந்தநேரி, பரப்பாடி, ஆகிய உப மின் நிலையங்களில் மேற்கொள்ளவிருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாகம் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். *ஷேர் பண்ணுங்க


