News December 6, 2024
நாங்குநேரி சின்னத்துரை குடும்பத்தினருடன் நடிகர் விஜய்

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுதிய“எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.தொடர்ந்து, நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் வெட்டுப்பட்ட சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி, தாய் அம்பிகா ஆகியோருக்கு புத்தகத்தை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்
Similar News
News November 19, 2025
நெல்லையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நவ.21 அன்று காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என வேலை வாய்ப்பு துறை உதவி இயக்குனர் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
News November 19, 2025
நெல்லையில் காட்டு யானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு

மாஞ்சோலை அருகே கோதையாறு வனப்பகுதியில் அரிகொம்பன், புல்லட் ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று காட்டு யானைகள் வேறு பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் நேற்று திடீரென ஒரு காட்டு யானை பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. மேலும் ராதாகிருஷ்ணன் யானை தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்யும் பிரவீன் என்பவரிடம் சத்யாதேவி என்ற பெண் தன்னை சப் கலெக்டர் என கூறி அறிமுகமாகி அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பிரவீனிடம் 17 பவுன் நகை, 8½ லட்சம் பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் சத்யாதேவி மற்றும் செல்லத்துரை ஆகிய இருவர் கைதான நிலையில் சுரேஷ் என்பவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


